அட பாவமே… வறுமையால் அதல பாதாளத்திற்கு சென்ற பாகிஸ்தான்…

0

உலக வங்கி சமீபத்தில் வெளியிட்ட தகவலின் படி, பாகிஸ்தானில் வறுமை விகிதம் நடப்பாண்டில் அதிகரித்துள்ளதாக கணித்துள்ளது. சென்ற ஆண்டில் 4.4 சதவீதமாக இருந்த வறுமை விகிதம் இந்த ஆண்டில் 5.4% ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையால் இந்தியாவை போல் பிற உலக நாடுகளும் பாதிக்கப்பட்டன. வளர்ச்சியடைந்த நாடுகள் தொற்றால் இழப்பு ஏற்பட்ட போதும் விரைவில் பாதிப்புகளிலிருந்து மீள தொடங்கினர். ஆனால் வளரும் மற்றும் ஏழை நாடுகள் தங்கள் பழைய நிலைக்கு மீள்வது ஒரு பெரும் சவாலாகவே உள்ளது. அதில் பாகிஸ்தானும் ஒன்று.

உலக வங்கியின் மதிப்பீடுகளின் படி, பாகிஸ்தானில் 40% குடும்பங்கள் பாகிஸ்தானில் மிதமான மற்றும் கடுமையான உணவு பாதுகாப்பின்மையால் தவித்து வருகின்றனர். பாகிஸ்தானில் வறுமை விகிதமானது, கடந்த 2020 ஆம் ஆண்டில் 4.4%,ல் இருந்து, 5.4% ஆக அதிகரித்துள்ளதாக மதிப்பிட்டுள்ளது.

மேலும் பாகிஸ்தானில் பாதிக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் வேலை மற்றும் வருமானத்தை இழந்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக தனி நபர் வளர்ச்சி விகிதம் வருடத்திற்கு சராசரியாக 2% மட்டுமே உள்ளது. இது கொரோனா காலம் என்பதால் அந்நாட்டில் வறுமை விகிதம் மேலும் அதிகரித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here