தளபதி விஜய் உடன் நெருக்கமாக இருக்கும் பிக் பாஸ் பிரபலம் – யாருனு நீங்களே பாருங்க!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான வனிதா தற்போது விஜய் உடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் வனிதா

நடிகர் விஜய் குமாரின் மகளாகிய வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அதிக பிரபலமானவர். ஆரம்ப நாளிலேயே தனது அதிரடியாக பேச்சால் பலரையும் அதிர வைத்தார். மேலும் வீட்டில் தனது அராஜகத்தை அடிக்கடி காட்டி வந்தார். வனிதாவை நாம் ஆரம்பத்தில் ஸ்ரீ ஹரியை வைத்து பல பிரச்சனைகள் ஏற்பட்ட போதே பார்த்திருக்கிறோம்.

மேலும் பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனாலும் தான் செய்த தவறை நினைக்காமல் அனைவரையும் கேவலமாக பேசினார். மேலும் அவரை விட்டு பிரிந்தது தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது 6 மாதம் கூட தாக்கு பிடிக்காமல் அவரை விட்டு பிரிந்தார்.

தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள வனிதா தனது கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார். யூடுப் சேனல், விஜய் டிவி நிகழ்ச்சி, பல படங்கள் என்று கை நிறைய சம்பாதித்து வருகிறார். இவர் ஆரம்பத்தில் விஜய் உடன் ‘சந்திரலேகா’ படத்தில் நடித்திருந்தார்.

அந்த புகைப்படங்களை எல்லாம் இணையத்தில் வெளியிட்டு வந்தார். தற்போது விஜய் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here