#PAKvsNZ 2வது டெஸ்ட் – சதம் அடித்த வில்லியம்சன்!! வலுவான நிலையில் நியூஸிலாந்து!!

0

தற்போது நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 2 வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நியூஸிலாந்து அணி சிறப்பாக விளையாடி வருகிறது. குறிப்பாக நியூஸிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் சதம் அடித்து அசத்தியுள்ளார். தற்போது பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் VS நியூஸிலாந்து:

நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி 3 டி 20 மற்றும் 2 டெஸ்ட் தொடரில் பங்கேற்க சென்றுள்ளது. ஏற்கனவே டி 20 தொடர்கள் முடிந்த நிலையில் நியூஸிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றியது. தற்போது இரு அணிகளுக்கும் இடையே டெஸ்ட் தொடர்கள் நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் தனது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. மேலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் வகிக்கிறது. தற்போது டெஸ்ட் தொடரை சமன் செய்யும் நோக்கில் பாகிஸ்தான் அணி களமிறங்கியுள்ளது. 2வது போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் பௌலிங்கை தேர்வு செய்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முதல் இன்னிங்ஸை துவக்கிய பாகிஸ்தான் அணி நியூஸிலாந்து அணி பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வந்தது. பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 297 ரன்களில் தனது ஆட்டத்தை இழந்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் கேப்டன் முஹம்மத் ரிஸ்வான் 61 ரன்களும் மற்றும் அசார் அலி 93 ரன்களை குவித்துள்ளார்கள். நியூஸிலாந்து தரப்பில் அபாரமாக பந்து வீசிய ஜேமிசன் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் 50வது தலைமை நீதிபதியாக சஞ்சீப் பானர்ஜீ பதிவியேற்பு – குவியும் வாழ்த்துக்கள்!!

அதன்பின்பு தனது முதல் இன்னிங்ஸை துவக்கிய நியூஸிலாந்து அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. துவக்க ஆட்டக்காரர்களான லதாம் 33 மற்றும் பிளுண்டேல் 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். டெய்லர் 12 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். அதன் பின்பு கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் நிக்கோலஸ் ஜோடி சேர்ந்து ரன்கள் குவித்து வந்தனர். இறுதியில் கேப்டன் கேன் வில்லியம்சன் தனது 140வது பந்துகளில் தனது சதத்தை பதிவு செய்து அசத்தினார் . மேலும் இது இவரது 24 வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

லைவ் ஸ்கோர்:

நியூஸிலாந்து – 286\3
வில்லியம்சன்- 112*
நிக்கோலஸ் -89*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here