வரலாற்றில் இன்று முக்கிய நாள்.. எம்.எஸ்.தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தினம்!!  

0
வரலாற்றில் இன்று முக்கிய நாள்.. எம்.எஸ்.தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தினம்!!
ஆஸ்திரேலியாவில்  உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 9 ஆண்டுகளுக்கு (2014) முன்பு இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் சமனில் முடிவடைந்தது. இந்த ஆட்டத்தில் ஒருபக்கம் இந்திய அணி விக்கெட்களை இழந்தாலும் மறுபக்கம் பொறுப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை தோனி உயத்தினார்.

எனவே இப்போட்டி முடிந்ததும், எந்த வித முன்னறிவிப்பும் இன்றி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் தோனி. இவருக்குப் பிறகு விராட் கோலி புதிய கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டார். தற்போது தோனி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இத்தினத்தை ரசிகர்கள் நினைவு கூர்ந்து சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தோனியின் கிரிக்கெட் கேரியர்:

538 – போட்டிகள்
526 – இன்னிங்ஸ்
17266 – ரன்கள்
44.96 – சராசரி
224 – அதிகபட்ச ஸ்கோர்
16 – 100கள்
108 – 50கள்
634 – கேட்சுகள்
3 – கேப்டனாக ஐசிசி கோப்பைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here