இனி ஆதார் இல்லாமலும் ஓய்வூதியம் பெறலாம்.., வழிமுறைகளை வெளியிட்ட உயர்நீதிமன்றம்!!!

0
இனி ஆதார் இல்லாமலும் ஓய்வூதியம் பெறலாம்.., வழிமுறைகளை வெளியிட்ட உயர்நீதிமன்றம்!!!
நாடு முழுவதும் உள்ள முதியவர்கள் தங்களது முதிர்வு காலத்தில் பயன்பெறும் வகையில் ஒரு குறிப்பிட்ட தொகை அவர்களுக்கு ஓய்வூதியமாக மாநில அரசுகள் வழங்கி வருகின்றனர். மேலும் இந்த ஓய்வூதிய தொகையை பெறுவதற்கு வருமான வரி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் கார்டு, வங்கி ஆவணம், மொபைல் எண் போன்றவை கட்டாயம் தேவைப்படுகிறது. இந்நிலையில் அலகாபாத்தில் உள்ள உயர் நீதிமன்றத்தில் மோகனா என்ற நபர் சில முதியோருக்கு ஆதார் கார்டு, இருப்பிடச் சான்றிதழ், மொபைல் நம்பர் போன்றவை இல்லாததால் அவர்கள் முதியோர் ஓய்வூதியம் பெற மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதனால் ஆதார் போன்றவை இல்லாமல், மற்ற ஆவணங்களை வைத்து அவர்களுக்கு முதியோர் ஓய்வு தொகை கிடைக்கும் வகையில் வழி செய்ய வேண்டும் என மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இனி வரும் நாட்களில் முதியோர் ஓய்வுத் தொகை பெறுவதற்கு ஆதார் மற்றும் மொபைல் எண் தேவை இல்லை. மேலும் வங்கி ஆவணங்களை சரிபார்த்து அதன் அடிப்படையில் முதியோர் ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here