ஆக்சிஜன் இல்லை,படுக்கைகள் இல்லை – டெல்லியை போல் ஆகும் தமிழ்நாடு!!!

0
ஆக்சிஜன் இல்லை,படுக்கைகள் இல்லை - டெல்லியை போல் ஆகும் தமிழ்நாடு!!!
ஆக்சிஜன் இல்லை,படுக்கைகள் இல்லை - டெல்லியை போல் ஆகும் தமிழ்நாடு!!!

கொரானா இரண்டாவது அலை தொற்றால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. கொரோனா தொற்றின் ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் அரசு தத்தளித்துக் கொண்டிருக்கிறது. நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க நம்மிடம் போதிய மருத்துவ சிகிச்சை வசதிகளும் மருந்துகளும் நம்மிடம் இல்லை இப்பொழுது தலைநகர் டெல்லியில் இருக்கும் நிலைமையை போல் தமிழகத்திலும் படுக்கைகளும் ஆக்சிஜன்களும் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

ஆக்சிஜன்,படுக்கைகள் இல்லை…

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா நோயின் பரவல் தீவிரமடைந்து கொண்டே போகிறது நோய் தொற்று குறைந்தபாடில்லை மகாராஷ்டிரா,உத்திரபிரதேசம்,டெல்லி ஆகிய மாநிலங்களில் தொற்றின் தாக்கம் எப்படி இருந்ததோ அதே தாக்கம் தமிழகத்திலும் அதே அவலம் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆக்சிஜனுடன் உள்ள படுக்கைகள் அனைத்தும் நோயாளிகளால் முழுமை அடைந்து விட்டன.நேற்றைய அரசின் நிலவரப்படி கிட்டத்தட்ட 1 லட்சத்து 52 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர் அதிலும் 40 ஆயிரம் பேர் ஆக்சிஜன் பயன்படுத்தி தீவிர  சிகிச்சைய பிரிவில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர் என்று கூறுகிறது. இப்படியே நடந்தால் டெல்லியில் நடந்த அவல நிலையயை போல் தமிழகத்திலும் எளிதில் நடந்துவிடும் என்ற பயம் அனைவருக்கும் எழுந்துள்ளது. தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் நேற்று மட்டுமே 7000 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் அதுமட்டுமல்லாமல் 35 ஆயிரம் மொத்தமாக சென்னையில் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளார்கள்

ஆக்சிஜன்,படுக்கைகள் இல்லை...
ஆக்சிஜன்,படுக்கைகள் இல்லை…பண்ணுங்க!!

இதில் தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கையில் 1748 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் 1,750 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர் அரசு கொடுத்துள்ள விவரத்தின்படி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை ராயப்பேட்டை கீழ்ப்பாக்கம் ஸ்டான்லி போன்ற அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அத்துடன் உள்ள படுக்கைகள் அனைத்தும் நிரம்பி விட்டன எதுவுமே காலியாக இல்லை.இந்நிலையில் சென்னையை அடுத்து கோயம்புத்தூரில் பாதிப்பு அதிகம் உள்ளது நேற்றைய நிலவரப்படி 13,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் அதில் 2896 பேர் ஆக்சிஜன் படுக்கைகளில் 550 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் உயிருக்குப் போராடி வருகின்றனர்.வெறும் 13 ஆக்சிஜன் படுக்கைகள் மட்டுமே கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் காலியாக உள்ளது,

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

கோவையை அடுத்து மதுரையில் தொற்றால் 1293 பேர் பாதிப்படைந்துள்ளனர்.ஆக்சிஜன் உடன் உள்ள படுக்கையிலும் தீவிர சிகிச்சை பிரிவில் 77 பேர் உயிருக்குப் போராடி வருகின்றனர்.மதுரையை அடுத்து தூத்துக்குடியில் 778 பேர் ஆக்சிசன் படுக்கையிலும் தீவிர சிகிச்சை பிரிவில் 212 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மிகக்குறைவாக தமிழகத்திலேயே அரியலூர் மாவட்டத்தில் 576 பேர் பாதிக்கப்பட்டு 266 பேர் ஆக்சிஜன் படுக்கைகளும் 46 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவே னாய் தொற்றின் பரவலைத் தடுக்கும் வகையில் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் முழு ஊரடங்கை முழுமையாக பின்பற்றி கடைபிடித்து இந்த கொடிய நோயை விரட்டி, நாங்கள் தமிழ்நாடு டெல்லி போல் இல்லை என காட்ட வேண்டும் என்று அரசு மக்களிடம் கேட்டுக் கொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here