தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். அவர் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்ற படத்தை இயக்கினார். ஆனால் ஏதோ சில காரணத்தால் படம் ட்ராப்பானது. அதோடு சினிமாவை விட்டு விலகி இருந்த அவர் 10 ஆண்டுகளுக்கு பிறகு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கி தன்னை ஒரு இயக்குனராக அறிமுகப்படுத்தி கொண்டார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இப்படத்தில் நயன்தாராவுடன் சேர்ந்து யோகி பாபு, சரண்யா, ஜாக்குலின், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் இப்படம் வசூலித்த மொத்த வசூல் விவரம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நெல்சனின் முதல் படமான கோலமாவு கோகிலா திரைப்படம் உலகளவில் 41 கோடி வரை வசூல் செய்துள்ளது என தெரிவிக்கின்றனர்.