தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் ஓட்டுநர், நடத்துனர் விண்ணப்பம்., முடங்கிய இணையதளம்!!!

0
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் ஓட்டுநர், நடத்துனர் விண்ணப்பம்., முடங்கிய இணையதளம்!!!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் ஓட்டுநர், நடத்துனர் விண்ணப்பம்., முடங்கிய இணையதளம்!!!

தமிழகத்தில் மதுரை, நெல்லை உள்ளிட்ட 6 அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள 685 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று பிற்பகல் 1 மணி முதல் http://www.arasubus.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பங்கள் விநியோகிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதன்மூலம் தகுதியுள்ளவர்களுக்கு எழுத்துத் தேர்வு, செய்முறை மற்றும் நேர்காணல் ஆகியவை நடைபெறும் என அறிவித்து இருந்தனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதன் காரணமாக விண்ணப்ப விநியோகம் தொடங்கிய சில மணி நேரத்திலே இணையதளம் முடங்கியது. இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், “ஒரே நேரத்தில் 60,000க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்ததால் இணையதளம் முடங்கியது. இந்த பிரச்சனை கூடிய விரைவில் சரி செய்யப்பட்டு விடும்.” என தெரிவித்துள்ளார்.

இந்த பயனாளிகளுக்கு சிவப்பு நிற ரேஷன் கார்டு விநியோகம்., அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட புதுவை அரசு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here