தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் நயன்தாரா – இதெல்லாம் தப்பு! தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு!!

0
தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் நயன்தாரா - இதெல்லாம் தப்பு! தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு!!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்ற கடற்கரைப்பகுதியில், பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத செயல் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது.

 அதிரடி வழக்கு பதிவு  :

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடித்த கையோடு திருப்பதிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். அங்கு காலில் செருப்பணிந்து நயன்தாரா சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, இதற்காக விக்னேஷ் சிவன் மன்னிப்பு கேட்டார். இது ஒருபுறமிருக்க, நயன், விக்கி திருமணம் நடைபெற்ற மகாபலிபுரம் கடற்கரை பகுதியில் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

போலீசார் பாதுகாப்பைத் தாண்டியும், 100 பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதுகுறித்து, புகார் அளித்த சரவணன் என்பவர், கடற்கரை என்பது பொது இடம் என்றும், அங்கு மக்களை அனுமதிக்காத இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என புகார் தெரிவித்தார். இந்த வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்றுக் கொண்டு, விரைவில் விசாரணை நடத்த உள்ளது. இந்த செய்தி, கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here