ருசியான மட்டன் கறி தோசை – வீக் எண்டு ஸ்பெஷல்!!

0

தோசை என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒரு டிபன். நிறைய வகை தோசை சாப்பிட்டு இருப்பிங்க, ஆனால் மட்டன் கறி தோசை சாப்பிட்டு இருக்கீங்களா? மிகவும் எளிய முறையில் மட்டன் கறி தோசை எப்படி செய்றதுனு குழப்பமா இருக்கா? அவர்களுக்கான குறிப்பு தான் இது. வீட்டுல செஞ்சு அசத்துங்க!

தேவையான பொருட்கள்:

தோசை மாவு – தேவையான அளவு

மட்டன் கொத்துக்கறி – 250 கிராம்

நல்லெண்ணெய் – தேவையான அளவு

தக்காளி – 100 கிராம்

இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்

மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

மிளகு தூள் – அரை ஸ்பூன்

பச்சைமிளகாய் – 1

தேங்காய் துருவியது – 1 கப்

முட்டை – 1

கொத்தமல்லி – 2 கொத்து

சோம்பு – 1 ஸ்பூன்

சீரகம் – 1 ஸ்பூன்

மிளகு – 1 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

அடுப்பில் கடாயை வைக்கவேண்டும். பின் எண்ணெயை ஊற்றி அதில் பச்சைமிளகாய் மற்றும் தக்காளியை சேர்க்கவும். பின்பு அதனுடன் சிறிது உப்பு சேர்த்து பச்சை வாசனை போற அளவுக்கு வதக்கவேண்டும். பின்பு வேகவைத்த மட்டன் கொத்து கறியை சேர்த்து இஞ்சி மற்றும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வதக்கவும். பிறகு மிளகாய் தூள், மிளகுத்தூள், சேர்த்து மேலும் எண்ணெய் ஊற்றி வதக்கினால் சுக்கா வறுவல் தயார்.

அதன்பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்துவிட்டு, ஊத்தாப்பம் ஊற்றுவது போல் கனமாக தோசையை ஊற்ற வேண்டும். அதன் மீது கலக்கிய முட்டையை ஊற்றி அதற்கு மேலாக தயார் செய்து வைத்த சுக்காவை பரப்பி, சிறிது மிளகு பொடியை தூவி, அதனுடன் நல்லெண்ணெய்யை ஊற்றி வெந்ததும் தோசையை திருப்பி போடா வேண்டும். வெந்ததும் கொத்தமல்லி தலையை தூவி எடுத்தால் போதும் சுவையான மட்டன் கறி தோசை தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here