Non veg பிரியர்களா நீங்க.! Mushroom Pepper Fry செஞ்சு சாப்பிடுங்க veg ஆவே மாறிடுவீங்க.!

1

இன்றைய காலகட்டத்தில் குழைந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அசைவ பிரியராகவே இருக்கின்றனர். இதனால் பல நோய்களுக்கு ஆளாகின்றனர். அதிக அளவு அசைவத்தை எடுப்பதால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனால் நோய் தொற்றும் விரைவாக ஏற்படுகிறது. அதனால் சைவத்தில் இந்த மாதிரி செய்து கொடுங்கள் கண்டிப்பாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

Mushroom நன்மைகள்

Mushroom இல் அதிக குணநலன்கள் உள்ளனர். பெரியவர்களும் இதனை உணவில் எடுத்து கொள்ளலாம். நீரிழிவு நோய்க்கு இது மிகவும் ஏற்றது. இது எளிதில் ஜீரணமாகும் உணவு என்பதால் யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். இது அதிகளவு சுவையுடனும் இருக்கும் அதனால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Mushroom Pepper Fry செய்ய தேவையான பொருட்கள்

Mushroom, சோம்பு சிறிதளவு, பச்சை மிளகாய் 2, மிளகு தூள் 1 கரண்டி, சின்ன வெங்காயம் 6, எண்ணெய் தேவையான அளவு, மஞ்சள் தூள், உப்பு தேவையான அளவு, கொத்தமல்லி.

செய்முறை

முதலில் Mushroom ஐ நீளவாக்கில் வெட்டி கொள்ளவும். பின்பு வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். அதன் பின் பச்சை மிளகாவை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு சிறிதளவு சேர்த்து பிறகு வெங்காயத்தை சேர்க்கவும்.வெங்காயம் நன்கு வதங்கியதும் பச்சைமிளகாவை சேர்க்கவும்.

பிறகு வெட்டி வைத்த Mushroom சேர்த்து நன்கு வதக்கவும்.மஞ்சள் தூள் சிறிதளவு சேர்க்கவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை. ஏனென்றல் Mushroom இல் தண்ணீர் அதிகளவில் இருப்பதால் சேர்க்க தேவையில்லை. பின்பு அதை மூடிவைத்து 5 நிமிடம் வேகவிடவும். அதன் பின் மிளகு தூள் 1 தேக்கரண்டி சேர்க்கவும். பின்பு அதை மூடி வைக்கவும். 2 நிமிடத்திற்கு பிறகு கொத்தமல்லி இலையை தூவி இறக்கி பரிமாறவும்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here