ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை இழந்தார் முகேஷ் அம்பானி – அப்போ யாரு முதல் இடம்..? என்ன காரணம்..?

0

ஆசிய பணக்காரா்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வந்த ரிலையன்ஸ் அதிபா் முகேஷ் அம்பானி இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளாா்.

காரணம்..!

உலகின் கச்சா எண்ணெய் விலையின் சரிவின் காரணமா ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் இருந்து ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி அவர்கள் பின்னடைந்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளார். இதற்கு காரணம் ஒபெக் கூட்டமைப்பு மற்றும் ரஷியா இடையே நடைபெற்ற கச்சா எண்ணெய் உற்பத்தி தொடா்பான பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது எனவும் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து அதன் விலையை குறைக்கப் போவதாக ரஷியா தன்னிச்சையாக அறிவித்தது இருந்தது எனவும் கூறப்படுகிறது.

யார் அந்த முதல் நபர்..!

கடந்த திங்கள் கிழமை ரிலைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் மதிப்பு 12 சரிந்துள்ளது. இதனால் முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 580 கோடி டாலா் குறைந்துள்ளது. இதனால் ஆசிய பணக்கார பட்டியலில் இருந்து இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அம்பானியை விட 260 கோடி டாலா் கூடுதல் சொத்து மதிப்பைக் கொண்டு 4,450 கோடி டாலா் பெற்று அலிபாபா நிறுவனா் ஜாக் மா முதலிடத்துக்கு முன்னேறியுள்ளாா்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here