அம்பானி வீட்டின் முன் நிறுத்தப்பட்ட வெடிகுண்டு கார் : இவர்களும் உடந்தையா? – தகவலை வெளியிட்ட என்ஐஏ!!

0
அம்பானி வீட்டின் முன் நிறுத்தப்பட்ட வெடிகுண்டு கார் : இவர்களும் உடந்தையா? - தகவலை வெளியிட்ட என்ஐஏ!!
அம்பானி வீட்டின் முன் நிறுத்தப்பட்ட வெடிகுண்டு கார் : இவர்களும் உடந்தையா? - தகவலை வெளியிட்ட என்ஐஏ!!

முகேஷ் அம்பானியின் வீட்டின் முன் நிறுத்தப்பட்ட வெடிகுண்டு காரின் பின்னணியில் முன்னாள் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் உள்ளிட்ட போலீசார் இடம்பெற்றுள்ளதாக என்ஐஏ அமைப்பு தெரிவித்துள்ளது.

முக்கிய தகவல்:

நாட்டின் முக்கிய பணக்காரர்களின் ஒருவராக உள்ள தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீடு மும்பையில் அமைந்துள்ளது. இவரது வீட்டின் முன்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெடிகுண்டு மற்றும் மிரட்டல் கடிதத்துடன் கூடிய மர்ம ஸ்கார்பியோ கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இது தீவிரவாதியின் அச்சுறுத்தல் செயலாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இதனை அடுத்து இந்த வழக்கு என்ஐஏ அமைப்புக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பம் நடந்துள்ளது.

அம்பானி வீட்டின் முன் நிறுத்தப்பட்ட வெடிகுண்டு கார் : இவர்களும் உடந்தையா? - தகவலை வெளியிட்ட என்ஐஏ!!
அம்பானி வீட்டின் முன் நிறுத்தப்பட்ட வெடிகுண்டு கார் : இவர்களும் உடந்தையா? – தகவலை வெளியிட்ட என்ஐஏ!!

அதாவது, இவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மர்ம காரின் பின்னணியில் முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் சச்சின் வாஸ், முன்னாள் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் பிரதீப் ஷர்மா உள்ளிட்ட 5 போலீசார் சம்பந்தப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும், இவர்கள் முகேஷ் அம்பானியை மிரட்டி பணம் பறிக்க இந்த செயலில் ஈடுபட்டு இருப்பது உறுதியாகியுள்ளது. இது மட்டுமல்லாமல், சில பகீர் தகவல்களையும் என்ஐஏ அமைப்பு வெளியிட்டுள்ளது.

அம்பானி வீட்டின் முன் நிறுத்தப்பட்ட வெடிகுண்டு கார் : இவர்களும் உடந்தையா? - தகவலை வெளியிட்ட என்ஐஏ!!
அம்பானி வீட்டின் முன் நிறுத்தப்பட்ட வெடிகுண்டு கார் : இவர்களும் உடந்தையா? – தகவலை வெளியிட்ட என்ஐஏ!!

மேலும், இந்த திட்டத்தில் சம்பந்தப்பட்ட காரின் உரிமையாளர் மன்சுக் ஹிரானை, இந்த மோசடிக்கு பயன்படுத்தி உள்ளனர். பின்னாளில் இவர், இந்த திட்டத்துக்கு ஒத்துழைக்க மறுத்ததால் அவரை கொலை செய்துள்ளனர். இதற்காக கூலிப்படைக்கு 45 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து இந்த வழக்கை திசை திருப்புவதற்காக டெலிகிராம் செயலியில் இருந்து ஜெய்ஷ் உல் ஹிந்த் என்ற தீவிரவாத அமைப்பின் பெயரில் மிரட்டல் விடுத்துள்ளதாகவும், இந்த வழக்கில் குறிப்பிடப்பட்ட சிசிடிவி கேமராவை அழித்ததும் இவர்கள் செயல் தான் என தெரிய வந்துள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here