பள்ளிகளில் இனி காலை உணவும் வழங்கப்படும் – தமிழக அரசு புதிய திட்டமா?

0
பள்ளிகளில் இனி காலை உணவும் வழங்கப்படும் - தமிழக அரசு புதிய திட்டமா

தமிழகத்தின் சென்னை மாநகராட்சியில் உள்ள 320 பள்ளிகளில் 85 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு தினமும் காலை உணவுத் திட்டம் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சிக்கும் விரிவுபடுத்துவது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையிலான குழு ஆலோசனை வழங்கியுள்ளது.

எவ்வளவு செலவாகும்??

இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை, சமூகநலத்துறை ஆகிய துறைகளுடன் ஆலோசித்து விரிவான திட்ட அறிக்கையுடன் பிப்ரவரியில் தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாகவே சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

என்னென்ன உணவுகள்??

காலை உணவுத் திட்டத்தில் கீழ்கண்ட உணவுகள் சேர்க்கப்படவுள்ளன,
*கேழ்வரகு அடை
*தமிழ்நாட்டின் பாரம்பரிய பச்சைப்பயிறு
*குதிரைவாலி, சாமைக் கஞ்சி
*கொண்டக்கடலை போன்ற சத்து நிறைந்த உணவுகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here