ரேஷன் அட்டை வழங்குவதில் இப்படி ஒரு சிக்கலா?? வெளியான திடுக்கிடும் தகவல்!!!

0
ரேஷன் அட்டை வழங்குவதில் இப்படி ஒரு சிக்கலா?? வெளியான திடுக்கிடும் தகவல்!!!
ரேஷன் அட்டை வழங்குவதில் இப்படி ஒரு சிக்கலா?? வெளியான திடுக்கிடும் தகவல்!!!

நாடு முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் பயனடையும் வகையில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த சலுகைகளை பெற முடியாமல் தற்போது தெலுங்கானா மக்கள் தவித்து வருகின்றனர். அதாவது தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 6 ஆண்டுகளில் 20 லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வழக்குத் தொடர்ந்த நிலையில் ரத்து செய்த அனைவருக்கும் புது கார்டு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தற்போது 2 லட்சம் புதிய கார்டுகள் மட்டுமே வழங்கியுள்ளனர். இது குறித்து குடிமை பொருள் வழங்கல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது கூடிய விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. அது முடிந்தவுடன் அனைவருக்கும் புது ரேஷன் கார்டு வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால் போர்ட்டல் மூலம் விண்ணப்பித்த நபர்களுக்கு ரேஷன் கார்டு விரைவில் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளனர். இந்த அறிவிப்பால் பலரும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும், ரேஷன் கார்டு வழங்குவதற்கும் என்ன சம்பந்தம் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்தியா படைக்க தவறிய சாதனை பட்டியல்…, டாப் 5 யில் 2 பாகிஸ்தான் வீரர்கள் இடம் பிடிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here