ஓசூரில் ரூ.635 கோடி செலவில் அமைகிறது எலக்ட்ரிக் பைக் தொழிற்சாலை..! 4300 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு..!

0

சட்டசபையில் அமைச்சர் எம். சி. சம்பத் அவர்கள் ஓசூரில் ரூ.635 கோடி செலவில் எலக்ட்ரிக் பைக் தொழிற்சாலை தொடங்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளார். இதனால் 4300 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கேள்வி..? பதில்..!

சட்டசபையில் ஓசூர் தொகுதி எம்எல்ஏ சத்யா அவர்கள் தனது தொகுதியின் தொழில் வளர்ச்சி குறித்து எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் எம். சி. சம்பத் பதில் அளித்துள்ளார். அமைச்சர் எம். சி. சம்பத் கூறியதாவது, பெங்களூரை சேர்ந்த எலக்ட்ரிக் பைக் நிறுவனம் ஒன்று ஓசூரில் ரூ .635 கோடி முதலீட்டில் தொழிற்சாலை அமைக்கவுள்ளது என தெரிவித்தார்.

சென்னைக்கு அடுத்தபடியாக ஓசூர் நகரில் தொழில் தொடங்க அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது எனவும் ஓசூர் நகரில் ஓராண்டில் மட்டும் ரூ. 250 கோடி மதிப்பீட்டில் 5 புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் எலக்ட்ரிக்கல் பூங்கா..?

ஆட்டோ மொபைல் துறை வளர்ச்சியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது எனவும் தமிழகத்தில் 4000 ஏக்கர் பரப்பளவில் பிஎஸ் 6 இஞ்சின்கள் தயாரிக்ககூடிய வகையில் எலக்ட்ரிக் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here