தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையா?? அப்போ தேர்வுகள் எப்போது.., கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!!!

0
தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையா?? அப்போ தேர்வுகள் எப்போது.., கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!!!
தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையா?? அப்போ தேர்வுகள் எப்போது.., கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!!!

புதுச்சேரியை தொடர்ந்து தமிழகத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என்று வெளியான தகவலுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் கொடுத்துள்ளார்.

அன்பில் மகேஷ்

தமிழகத்தில் தற்போது +1 மற்றும் +2 மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இந்நிலையில் புதுச்சேரி, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இவர்களின் அச்சத்தை போக்க சுகாதாரத் துறையினரும் பாதுகாப்பாக இருக்கும் படி எச்சரித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த சூழ்நிலையில் தேர்வுகள் வேறு நடைபெற்று வருவதால் மாணவர்களின் நலன் கருதி புதுச்சேரி அரசு 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 நாட்கள் தொடர் விடுமுறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்திலும் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படும் என்றும், 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முன்னதாகவே நடத்தப்படும் என்று வதந்திகள் பரவி வந்தது.

அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக ஆதார் விபரங்கள் புதுப்பிக்கப்படும்.., மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!!

இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இடம் கேட்டபோது பள்ளிகளுக்கு விடுமுறை விடும் அளவிற்கு வைரஸ் காய்ச்சலால் எந்த பாதிப்பும் இல்லை தேர்வுகளும் முன்னதாக நடைபெறும் என்று வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது. திட்டமிட்டபடி 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான தேர்வு அடுத்த மாதம் நடைபெறும். மேலும் வைரஸ் காய்ச்சலால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிவுரைப்படி செயல்படுவோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here