மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு – கட்ஆப் மார்க் அதிகரிப்பு!!

0
மருத்துவர்
மருத்துவர்

நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பது கட்டாயம். தமிழகத்தில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடப்பதற்கு இரண்டு ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. நீட் தேர்வு கட்டாயம் என்று அறிவிக்கபட்டிருப்பதால் மாணவர்களுக்கு குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள் கூட நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினமாக உள்ளது.

மருத்துவ படிப்பு:

இதையடுத்து அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் சேர 7.5% உள் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதால், மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கபடுகின்றது. அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட முன்வடிவுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் பிரோகித் நேற்று ஒப்புதல் அளித்தார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

NEET EXAM
NEET 

இந்நிலையில்,கடந்த ஆண்டு பொது பிரிவினருக்கு 520, தாழ்த்தப்பட்டவர்களுக்கு 360, பிற்படுத்தப்பட்டோருக்கு 470, மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 458 ஆக கட்ஆப் மதிப்பெண் இருந்தது. இந்த வருடம் 7.5% ஒதுக்கீடு உள்ளதால் 300 பேருக்கு எம்.பி.பி.ஸ் சீட் கிடைக்கும். ஆனால் இந்த முறை 500 க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் நிறைய மதிப்பெண் பெற்றிருப்பதால் அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் அதிகளவு சேர்வது சற்று கடினம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை சரி செய்வதற்காக 7.5% இடஒதுக்கீடு போக மீதிமுள்ள இடத்துக்கான கட்ஆப் மதிப்பெண்ணை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 70 முதல் 100 மதிப்பெண்கள் வரை கட்ஆப் உயர்த்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.7.5%இட ஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததால் மருத்துவப் படிப்பிற்கான கவுன்சிலிங் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்பதை மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here