காங்கிரஸ் கட்சியின் மக்களவை தேர்தல் வாக்குறுதி., ரூ.1 லட்சம் உதவித்தொகை? ராகுல் காந்தி வெளியீடு!!!

0
காங்கிரஸ் கட்சியின் மக்களவை தேர்தல் வாக்குறுதி., ரூ.1 லட்சம் உதவித்தொகை? ராகுல் காந்தி வெளியீடு!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான தேதியை, இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்க உள்ளது. இதையடுத்து பொதுமக்களை கவரும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளை பல்வேறு அரசியல் கட்சிகளும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாராகி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதில் இளையோர், பட்டதாரிகளுக்கான தேர்தல் வாக்குறுதிகள் குறித்த அறிவிப்பை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்.

TET தேர்வர்கள் கவனத்திற்கு.., தேர்வுக்கு தயாராக இத மட்டும் பண்ணுங்க.., மிஸ் பண்ணிடாதிங்க!!

அதன்படி,

  • 25 வயதுக்குட்பட்ட டிகிரி அல்லது டிப்ளமோ முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ்ஷிப் பயிற்சியுடன் ஓராண்டுக்கு ஒரு லட்சம் உதவித் தொகையும் வழங்கப்படும்.
  • அரசின் பல்வேறு துறைகளில் 30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
  • போட்டி தேர்வுகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடனும், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெறாமல் இருக்கவும் புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும்.
  • ஃபுட் டெலிவரி உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு மேம்பட்ட வேலை சூழலை உறுதி செய்ய புதிய சட்டங்கள் வகுக்கப்படும் என அறிவித்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here