மக்களவை தேர்தல் 2024.., தபால் வாக்கு சீட்டுக்கான நெறிமுறைகள் வெளியீடு!!!

0
மக்களவை தேர்தல் 2024.., தபால் வாக்கு சீட்டுக்கான நெறிமுறைகள் வெளியீடு!!!
லோக்சபா தேர்தலுக்கான பணிகள் அனைத்தும் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் தேர்தலுக்கான அறிவிப்பு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவ்வப்போது தேர்தல் குறித்து பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது தபால் வாக்கு சீட்டுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
  • அதன்படி தபால் வாக்கு சீட்டுகளை தயார் செய்யும் பணிகளை கண்காணிக்க ஒரு உதவி தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும்.
  • வேட்பாளர் பட்டியல் இறுதி செய்தவுடன் தபால் வாக்குகளை அச்சடிக்கும் பணியை தொடங்க வேண்டும். தபால் வாக்குகளை அச்சடிக்கும் பணியை அரசு அச்சங்களுக்கு தான் வழங்க வேண்டும்.
  • இது மட்டுமல்லாமல் தபால் வாக்கு சீட்டுகளை அச்சடிக்கும் மையங்களுக்கு மின்சாரம் தடையின்றி வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
  • ஒரு பண்டலுக்கு 50 வாக்கு சீட்டுகள் வைத்து தான் கட்டி வைக்க வேண்டும். அந்த வாக்குச் சீட்டுகளில் வேட்பாளர் பெயர், சின்னம் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • அச்சடிக்கப்பட்ட இந்த வாக்கு சீட்டுகளை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்த பின்னர் அனைத்தும் ஒரு இரும்பு பெட்டியில் வைத்து தனியறையில் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here