மதுபானம் ஒருபோதும் கொரோனா வைரஸிற்கு மருந்து அல்ல – உலக சுகாதார நிறுவனம் தகவல்..!

0

கொரோனாவில் இருந்து காப்பாத்த அணைத்து நாடுகளும் அதற்க்கான மருந்து மற்றும் தடுக்கும் முறையில் மிகவும் கவனமாக ஆர்வமாக செயல்பட்டு கொண்டு இருக்கின்றனர்,சிலர் சமூக வலைத்தளங்களில்கொரோனாவிடம் இருந்து மது பாதுகாக்கும் எனதவறான தகவல்கள் பரவி வந்த வேளையில் அதை உலக சுகாதார நிறுவனம் மறுத்துள்ளது.

மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு

மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு  என ஒரு பழமொழியே இருக்கிறது,ஒரு போதும் மது உடல்நலத்துக்கு நல்லது இல்லை. மதுவை சாப்பிட்டால் கண்டிப்பாக உடல்நலத்திற்கு தீங்குதான் வரும் என்பது ஆய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளது.உலகளவில் ஆண்டுக்கு 30 லட்சம் பேர் மதுவினால் ஏற்படும் பதிப்பில் மரணம் அடைகின்றனர். இப்பொழுது எல்லாம் சமீப காலமாக மதுவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மட்டுமே அதிகரித்துக்கொண்டு வருகிறது.

மது என்பது மிக பெரிய விஷம் மற்றும் கொடிய நோய்யாகும்,இளைஞர்கள் பலர் மதுவிற்கு அடிமையாகுக்கிறார்கள் சிறுவயதிலேயே இளைஞர்கள் மதுக்கு ஆளாகி விடுகின்றனர் இதனால் சிந்திக்கும் திறனையே இழந்து விடுகிறார்கள். பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு தண்டனையும் பெறுகிறார்கள்.

உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை:

இந்த நிலையில் உலக அளவில் பல நாடுகளிலும் மதுபானங்கள் குடித்தால், அது கொரோனா வைரசிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் கொரோனா வைரசை மது பானங்கள் கொன்று விடும் என்றெல்லாம் தவறான தகவல்கள் சமூக வலைத்தளகளில் வெளியாகின. இதை உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டமாக மறுக்கிறது. இவ்வாறு பரவி வரும் செய்தி முற்றிலும் வதந்தி என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here