கொரோனா அறிகுறி இருக்கும் அனைவரையும் பரிசோதனை செய்யுங்கள் – மத்திய அரசு உத்தரவு..!

0

உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரசின் தாக்கம் தமிழ் நாட்டிலும் அதிகரித்துள்ளது. சென்னையில் பல இடங்களில் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.சென்னையில் 20 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிசம்பர் 2019 – கோவிட்-19

சீனாவில் டிசம்பர் 2019 கொரோனா என்னும் வைரஸ் உலகம் முழுவதும் மிகத் தீவிரமாக பரவியாது. பல நாடுகள் தங்கள் எல்லைகளை மூடிவிட்டன. வெளிநாட்டினருக்கு பயண தடையிட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தனர்  . இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

இதுவரை இந்தியாவில்102 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 2 பேர் உயிரிழந்தனர். கர்நாடகாவில் முதல் உயிரிழப்பும், அதனை தொடர்ந்து டெல்லியிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் பரவல் என்பது அவ்வளவு தீவிரமாக இல்லை என்பது தான் அரசின் கருத்தாக இருக்கிறது. இதற்காக அரசின் சார்பில் மென்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை தினமும் சுகாதாரத்துறை விளக்கி வருகிறது.

தனியார் மருத்துவமனை நிர்வாகிகள்  குற்றச்சாட்டு

விமான வாயிலாக வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களும் தீவிர கண்காணிக்கபட்டு வந்தனர் அதுமட்டும்மின்றி அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு என தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு இருப்பதையும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எடுத்து கூறி வருகிறார்.

இதற்கு முக்கிய காரணம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இல்லை என்று தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்து வருகிறது. ஆனால் இது உண்மையல்ல, கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கி இருப்பதாக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் ஆதார பூர்வமாக குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

அரசு மருத்துவமனையில் மெத்தனம்

சென்னையில் கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு அணுகியுள்ளனர், தனியார் மருத்துவமனைகள் கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களை அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறுகின்றன. அரசு மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள் பரிசோதனைக்குப் பின் கொரோனா அறிகுறி இல்லை என திருப்பி அனுப்பப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்களை அரசு மருத்துவமனைகள் கவனக்குறைவாக சிகிச்சை அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த ஓரு வாரமாகவே முக்கிய மருத்துவமனைகளுக்கு கொரோனா நோய் அறிகுறியுடன் வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தங்களுடைய மருத்துவமனைகளுக்கு தினமும் 3 முதல் 4 பேர் கொரோனா அறிகுறியுடன் வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.

அவர்களை தங்களுடைய மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதிக்க வேண்டும் என்றால் அதற்கான உத்தரவு இன்னும் கிடைக்கவில்லை. கொரோனா பாதிப்பு அறிகுறியுடன் வருபவர்களுக்கு அரசு மருத்துவமைக்கு அனுப்பி வைத்து அங்குதான் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு இருப்பதை அவர்கள் காரணம் கூறுகின்றனர்.அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தால் அத்தகைய நபர்களுக்கு சரியான சிகிச்சை கண்காணிப்போ,சோதனையோ  நடத்தப்படுவது இல்லை. அவர்கள் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவதன் காரணமாக வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அந்த பாதிப்புக்கு உள்ளானவரக்ள் செல்லும் இடங்களில் இருப்பவர்களுக்கும் இந்த கொரோனா தொற்று ஏற்பட அபாயம் இருப்பதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே இத்தகைய நோய் பாதிப்புக்குள்ளானவர்களை தீவிரமாக கண்காணிப்பதன் மூலமே இந்த நோயை கட்டுப்படுத்த முடியும், இதற்கு அரசு மெத்தனம் காட்டினால் அடுத்த சில வாரங்களில் அதன் பாதிப்பு கடுமையாக இருக்கும் அவர்கள் எச்சரித்து வருகின்றனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here