பிளேஆப் செல்லும் வாய்ப்பை இழந்த சென்னை….,சொந்த மைதானத்தில் தோல்வி….,

0
பிளேஆப் செல்லும் வாய்ப்பை இழந்த சென்னை....,சொந்த மைதானத்தில் தோல்வி....,
பிளேஆப் செல்லும் வாய்ப்பை இழந்த சென்னை....,சொந்த மைதானத்தில் தோல்வி....,

தற்போது நடைபெற்று முடிந்த கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியுள்ளது. இதன் மூலம், இன்று முதல் ஆளாக பிளேஆப் சுற்றுக்கு தகுதியாகும் வாய்ப்பை இழந்துள்ளது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலாவதாக பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, சென்னை அணி சார்பில் களமிறங்கிய ருதுராஜ் (17), கான்வே (30), ரஹானே (16), ராயுடு (4), ஜடேஜா (20), துபே (48), மொயீன் அலி (1), தோனி (2) ஆகியோரது பங்களிப்பு மூலம் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை மட்டுமே எடுத்தது.

இரட்டை குழந்தைகளுடன் நடிகை நயன்தாரா….,விக்னேஷ் சிவனின் அன்னையர் தின வாழ்த்து….,

இப்போது 145 என்ற இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி 18.3 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி சார்பில் நிதிஷ் ராணா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் அரை சதம் அடித்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here