இரட்டை குழந்தைகளுடன் நடிகை நயன்தாரா….,விக்னேஷ் சிவனின் அன்னையர் தின வாழ்த்து….,

0
இரட்டை குழந்தைகளுடன் நடிகை நயன்தாரா....,விக்னேஷ் சிவனின் அன்னையர் தின வாழ்த்து....,
இரட்டை குழந்தைகளுடன் நடிகை நயன்தாரா....,விக்னேஷ் சிவனின் அன்னையர் தின வாழ்த்து....,

தமிழ் திரையுலகில் வலம் வரும் நட்சத்திர ஜோடிகளில் ஒன்று நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன். கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘நானும் ரவுடி தான்’ திரைப்படத்தில் ஒன்றாக இணைந்து பணியாற்றிய நடிகை நயன்தாராவுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் மலர்ந்தது. தொடர்ந்து இருவரும் ஜோடியாக பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்தனர்.

இதையடுத்து, கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. இந்த குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனில் மற்றும் உலக தைவிக் என்று பெயரிட்டதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி.

சரியத் துவங்கிய கொரோனா பாதிப்பு….,தமிழகத்தில் ஒரே நாளில் 23 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி……,

இருப்பினும், இந்த குழந்தைகளின் புகைப்படத்தை இருவரும் வெளியிடாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில், இன்று உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது மனைவி நயன்தாராவுக்கு வாழ்த்து சொன்ன இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது குழந்தைகளின் புகைப்படத்தை முதல் முறையாக சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள்தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here