வீட்டுக்குள் சிக்னல் இல்லை – மேற்கூரையின் மீது ஏறி ஆன்லைனில் படிக்கும் மாணவி..!

0
kerala girl in rooftop
kerala girl in rooftop

கேரளாவில் வீட்டிற்குள் செல்போன் சிக்னல் கிடைக்காததால் வீட்டின் மேற்கூரையில் ஏறி ஆன்லைன் வகுப்பை கற்ற மாணவி.நம் நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுதுமே செல்போன் சிக்கனல் பிரச்சனை மிகவும் அதிகமாக இருக்கிறது, அதுவும் குறிப்பாக கிராமங்களில் சிக்னல் சரியாக கிடைப்பதில்லை என்பதால் அவர்களுக்கு வரக்கூடிய முக்கியமான போனிகள் கூட துண்டித்துவிடுகின்றன என்று பல்வேறு தரப்பில் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

வீட்டின் மேற்கூரையில் ஏறி ஆன்லைன் வகுப்பை கற்ற மாணவி

கொரோனா ஊரடங்கு என்பதால் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் கல்வி வகுப்புகளை ஆன்லைன் மூல நடத்தி வருகின்றன.ஆன்லைன் வகுப்புகளில் பங்கெடுத்து தனது பாடங்களை கற்று வருகிறார்கள் மாணவர்கள்.கேரள மாநிலம் கோட்டக்கலை அடுத்த அரீக்கல் என்னும் பகுதியை சேர்ந்தவர் நமீதா நராயணன். இந்த பெண் BA ஆங்கிலம் படித்து வருகிறார்.ஆனால் இவர் ஆன்லைன் மூலம் பாடங்களை கற்க தேர்வு செய்த இடம் தான் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது, அதாவது வீட்டில் சரியாக சிக்னல் கிடைக்காத நிலையில் வீட்டின் மேற்கூறையில் சில மணி நேரம் உட்கார்ந்து கற்று வந்துள்ளார்.வீட்டின் எங்கும் செல்போன் சிக்னல் கிடைக்காத காரணத்தால் வீட்டின் மேற்கூரையில் ஏறி நமீதா வகுப்பை கண்டுள்ளார்.

ரிலையன்ஸ் ஜியோ சலுகைகள் – நான்கு மடங்கு பலன்கள்..!

kerala girl namitha
kerala girl namitha

மேலும்அவர் கூறியது வீட்டின் அனைத்து பகுதிகளிலும் உட்கார்ந்து படித்தேன் ஆனால் எங்கும் சிக்னல் சரியாக கிடைக்கவில்லை. அதனால் வீட்டின் மேற்கூரையை தேர்வு செய்தேன் என அவர் தெரிவித்தார்.பின்பு இந்த தகவல் ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து, தனியார் இன்டர்நெட சேவை நிறுவனம் ஒன்று நமிதா வீட்டிற்கு சென்று அவருக்கு அதிவேக இன்டர்நெட் சேவையை வீட்டிற்குள்ளேயே கிடைக்கும்படி உதவி செய்ததாக தகவல் வெளிவந்துள்ளது.இதனையடுத்து அந்த மாணவி மிகவும் மகிழ்சியடைந்துள்ளார், மேலும் இதேபோல பல மாணவ மாணவிகள் இன்டர்நெட் சேவை சரிவர கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாகவும் நமீதா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

எம்.எல்.ஏ மற்றும் எம்.பி வாழ்த்து

இக்கட்டான சூழ்நிலையிலும் இந்த தடைகளை தாண்டி கல்வி கற்க நினைத்த நமீதாவுக்கு அப்பகுதி எம்.எல்.ஏ மற்றும் எம்.பி ஆகியோர் தங்களதுபாரட்டுகளை தெரிவித்துள்ளனர். ஆன்லைன் வகுப்புகளில் கற்றுக் கொள்ள தனது முன்பிருந்த தடைகள் அனைத்தும் தாண்டி கல்வி கற்க வேண்டும் என்பதையே லட்சியமாக கொண்ட அந்த கல்லூரி மாணவிக்கு பாரட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here