உருகி உருகி காதலித்த பெண்ணிடம் BMW கார் கேட்ட காதலன்.., மாமியார் வீட்டுக்கு அனுப்பிய மருத்துவ மாணவி!!

0
உருகி உருகி காதலித்த பெண்ணிடம் BMW கார் கேட்ட காதலன்.., மாமியார் வீட்டுக்கு அனுப்பிய மருத்துவ மாணவி!!

இன்றைய காலகட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வரதட்சணை கேட்கும் சம்பிரதாயம் குறைந்து கொண்டே வரும் நிலையில், தற்போது காதலித்த காதலியிடம் வரதட்சணை கேட்டு தற்கொலைக்கு தூண்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் சகானா என்ற மாணவி மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில், அதே கல்லூரியில் தன்னுடன் சேர்ந்து படித்த ருவைசி என்பவரை காதலித்து வந்துள்ளார்.

சமீபத்தில் சகானாவுடைய தந்தை தவறிய நிலையில், தனது காதலனிடம் திருமணம் குறித்து பேசிய போது, ருவைசி தன்னுடைய அப்பா 50 பவுன் நகை, 50 லட்சம் ரொக்கம், ஒரு பி எம் டபுள்யூ கார் கேட்கிறார் என்று கூறியுள்ளார்.இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சகானா படிப்புக்கே கஷ்டப்படும் நிலையில் எப்படி இவ்வளவு தரமுடியும் என்று கூறியுள்ளார். அப்படி என்றால் கல்யாணம் நடக்காது என்று கூற, என்ன செய்வதென்று அறியாமல் சகானா தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும் இந்த சம்பவம் கேரளாவை உலுக்கி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here