பள்ளி மாணவர்களே…, பிப்ரவரி மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா?? முழு விவரம் உள்ளே!!

0
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விழாக்காலங்கள், பேரிடர் காலங்கள் மற்றும் முக்கிய உள்ளூர் நிகழ்வுகள் நேரங்களில் விடுமுறை அளிப்பது வழக்கம். அந்த வகையில், கடந்த ஜனவரி மாதத்தில், புத்தாண்டு, பொங்கல், மாட்டுப் பொங்கல், குடியரசு தினம், தைப்பூசம் என தொடர்ச்சியாக விடுமுறைகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில், கர்நாடக பள்ளிகளில்  தற்போது நடந்து வரும் பிப்ரவரி மாதத்திற்கான விடுமுறை காலண்டர் வெளியாகியுள்ளது. எத்தனை நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்பதை பின்வருமாறு காணலாம்.

கர்நாடக பள்ளிகளின் பிப்ரவரி 2024 க்கான விடுமுறை காலண்டர்:

  • பிப்ரவரி 4, 2024 ஞாயிற்றுக்கிழமை (உலக புற்றுநோய் தினம்)
  • பிப்ரவரி 10, 2024 சனிக்கிழமை (விருப்ப விடுமுறை, அறிவியல் வினாடி வினா & செயல்பாடுகள்)
  • பிப்ரவரி 14, 2024 புதன்கிழமை (வசந்த பஞ்சமி/சரஸ்வதி பூஜை)
  • பிப்ரவரி 18, 2024 ஞாயிற்றுக்கிழமை (ஸ்ரீ மத்வநவமி)
  • பிப்ரவரி 19, 2024 திங்கட்கிழமை (சிவாஜி ஜெயந்தி)
  • பிப்ரவரி 21, 2024 புதன்கிழமை (சர்வதேச தாய்மொழி தினம்)
  • பிப்ரவரி 22, 2024 வியாழக்கிழமை (சிந்தனை தினம் மற்றும் பாரத் சாரணர் & வழிகாட்டிகள் தினம்)
  • பிப்ரவரி 28, 2024 புதன்கிழமை (தேசிய அறிவியல் தினம்)

இவற்றில் ஞாயிற்றுக்கிழமை என்பது அதிகாரப்பூர்வ விடுமுறையாகும். மற்ற தினங்களில் அந்தந்த பள்ளிகளை பொறுத்து அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here