மெட்ரோ பயணிகளே.., இனி இதை மட்டும் செய்யாதீங்க.., மீறினால் 5000 அபராதம் & சிறை தண்டனை!!!

0
மெட்ரோ பயணிகளே.., இனி இதை மட்டும் செய்யாதீங்க.., மீறினால் 5000 அபராதம் & சிறை தண்டனை!!!
சென்னை மெட்ரோவில் நாளுக்கு நாள் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே உள்ளது. அந்த வகையில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 84, 633, 84 பயணிகள் பயணம் செய்துள்ளனர். மேலும் பயணிகளின் பாதுகாப்பு கருதி மெட்ரோ நிர்வாகம் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் உள்ளது. அந்த வகையில் இப்போது பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதாவது சிலர் கடைசி நேரத்தில் ரயிலை பிடிக்க முடியாததால் தானியங்கி கதவுகள் மூடப்படும் போது கையில் இருக்கும் வாட்டர் பாட்டில் அல்லது பேக்கை தூக்கி வீசி கதவுகளை மூட விடாமல் தடுக்கின்றன.
இதனால் அலுவல் நேரங்களில் மூன்று நிமிடத்திற்கு ஒரு முறை இயக்கப்படும் ரயில் சேவை மிகவும் பாதிக்கப்படுகிறது. மேலும் இது போன்ற பயணிகள் கதவுகளை திறக்க முயற்சிப்பதால் பல ஆபத்தான நிகழ்வுகளும் ஏற்படுகிறது. இதனால் இனி வரும் நாட்களில் இது போன்ற பயணிகள் யாரும் செய்யக்கூடாது என எச்சரித்துள்ளனர். ஒரு வேலை இந்த அறிவிப்பையும் மீறி செய்தால் அந்த நபர் மீது சிறை தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here