ஜூன் 21 வரை ஊரடங்கை நீட்டித்து மாநில அரசு உத்தரவு… கொரோனா குறைந்த பகுதிகளில் தளர்வுகள்!!!

0

கர்நாடக முதல்வர் எடியூரப்பா தற்போது அம்மாநிலத்தில் அமலில் இருக்கும் ஊரடங்கை ஜூன் 21 வரை நீடித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் தொற்று குறைவான பகுதிகளில் சில தளர்வுகளையும் அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் தினசரி புதிய பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருகிறது. விரைவில் கோவிட்-19 பாசிடிவ் விகிதம் 5 சதவீதத்திற்கும் கீழ் சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அம்மாநிலத்தில் தொற்றுப் பரவல் காரணமாகக் கடந்த ஏப்ரல் 27-ம் தேதி முதல் 14 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இவ்வாறு ஊரடங்கு நடைமுறையில் இருந்தாலும் தற்போது கர்நாடகாவில் நோய் பரவல் எண்ணிக்கை 11 மாவட்டங்களில் அதிகரித்துள்ளது. இதனால் , கர்நாடகாவில் வரும் ஜூன் 21-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக எடியூரப்பா அறிவித்துள்ளார். இதனுடன் சில தளர்வுகளையும் அறிவித்துள்ளார்.

கர்நாடக அரசு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “15 சதவீதத்துக்கும் குறைவாகத் தொற்று விகிதம் உள்ள மாவட்டங்களில், 50 சதவீத ஊழியர்களுடன் தொழிற்சாலைகள் இயங்கலாம். பின்னலாடைத் தொழிலைப் பொறுத்தவரையில் 30 சதவீத ஊழியர்கள் இயங்கலாம். அதேபோலக் கட்டுமானத் தொழிலும் தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல காலை 5 மணி முதல் 10 மணி வரை பூங்காக்கள் இயங்கலாம். அத்தியாவசியப் பொருட்கள் விற்பனைக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here