இனி தங்கம் வாங்கணுனா நம்ம சுரங்கத்துக்கு தான் போனும் போல … அப்படினு பொலம்புற அளவுக்கு உயர்ந்தது தங்கம் விலை!!!

0

தொர்ச்சியாக அதிகரித்து வரும் தங்கத்தின் விலை; இன்றயை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 உயர்ந்து ரூ.37,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உயர்ந்தது தங்கம் விலை:

பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. தங்கம் விலை நாளுக்கு நாள், ஏறிய வண்ணமும், இறங்கிய வண்ணமுமாக உள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.264 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,640-க்கும், சவரன் ரூ.37,120க்கும் விற்பனை ஆகிறது.

கடந்த மாதங்களில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 40 ஆயிரத்தைத் தாண்டியது. அதன் பிறகு தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கம் என இருந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 உயர்ந்திருப்பது  நகை பிரியர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஒரு கிராம் தூய தங்கம் (24 கேரட்) 4999 ரூபாய்க்கு உயர்ந்து சவரன் தூய தங்கம் 39992 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை 4966 ரூபாயாக இருந்தது.இதே போல் வெள்ளி விலை உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 77.10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோ வெள்ளி 77,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here