டுவிட்டர் இல்லன்னா என்ன பா.. அதான் இது இருக்குல.. இந்திய செயலியின் மீது கவனத்தை திருப்பிய உலக நாடுகள்!!!

0

சமீபத்தில் ட்விட்டர் சமூக வலைத்தளத்திற்கு நைஜீரியா அரசு தடை விதித்தது. இதை தொடர்ந்து அந்நாட்டில் ட்விட்டர் பயனாளர்களால்  ட்விட்டர் வலைத்தளத்தை பயன்படுத்தமுடியவில்லை. இந்நிலையில் இந்தியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘கூ’ செயலியில் நைஜீரியா அரசு சார்பில் கணக்கு துவக்கப்பட்டுள்ளது.

நைஜீரியாவில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனை தொடர்ந்து, 1967 முதல் 1970 வரை நைஜீரியாவில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் 10 லட்சம் பேர் உயிரிழந்தனர் என்பதை  சுட்டிக்காட்டி அதிபர் முகமது தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதிபரின் கருத்து வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதாக கூறி அதை அதிபரின் வலைதள பக்கத்தில் இருந்து டுவிட்டர் நிறுவனம் நீக்கியது.

 

இதனால் கோபமடைந்த நைஜீரிய அரசு டுவிட்டருக்கு தடை விதித்தது. டுவிட்டரில் இருந்து வெளியேறிய நைஜீரியா அரசு தங்கள் நாட்டில் பொதுமக்கள் டுவிட்டர் பயன்படுத்தவும் தடைவிதித்தது. நைஜீரிய அரசு ட்விட்டர் சமூகவலைதளத்துக்கு தடை விதித்த மறுநாளே இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட கூ செயலிக்கு அனுமதி வழங்கியுள்ளது.

கூ செயலி உருவாக்கிய நிறுவனத்தின் தலைமை செயல்அதிகாரி அபரமேயா ராதாகிருஷ்ணன் கூறுகையில், “சர்வதேச அளவில் பயன்படுத்தும் செயலியாக கூ-வை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கேற்ப இதன் தளம் மேம்படுத்தப்படும். மேலும் நைஜீரியா அரசின் முடிவை நான் வரவேற்கிறேன்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here