ஹெச் 4 விசா கட்டுப்பாடு நீக்கம் – ஜோ பைடன் அதிரடி நடவடிக்கை!!

0

ஹெச் 4 விசா மற்றும் ஹெச் 1 பி விசா மீது டிரம்ப் அரசு கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் அமெரிக்காவில் வாழும் இந்தியா மக்கள் துன்பத்துக்கு ஆளாகினர். தற்போது இதுகுறித்து ஜோ பைடன் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.

ஹெச் 4 விசா:

பொதுவாக ஹெச்1பி விசா வைத்துள்ளவர்கள் கிரீன் கார்டை பெற விண்ணப்பம் செய்திருந்தாலோ, அல்லது ஹெச்1பி விசா காலம் 6 வருடங்களுக்கு அதிகமாக நீட்டிக்கப்பட்டு இருந்தாலோ விசா உரிமையாளரின் கணவன் அல்லது மனைவி அமெரிக்காவில் வேலை செய்ய உரிமையை ஹெச் 4 விசா பிரிவு மூலம் வழங்கப்படும். இந்த உரிமையை சமீபத்தில் முந்தய கால அதிபரானா டிரம்ப் அரசு தடை விதித்தது. இதனால் அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டு மக்கள் துன்பப்பட்டனர். குறிப்பாக இந்தியா மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் இந்த உத்தரவை, அமெரிக்க மக்கள் அதிகம் வேலைவாய்ப்புகளை பெற வேண்டும் என்ற நோக்கில் கொண்டுவரப்பட்டது என்று டிரம்ப் அரசு அறிவித்திருந்தது. தற்போது அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் கூட்டணி தற்போது பல்வேறு குடியேற்றக் கட்டுப்பாடுகளை ரத்து செய்த வருகின்றனர். இதனால் அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டு மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது ஹெச்1பி விசா மற்றும் ஹெச் 4 விசா மீது விதிக்கப்பட்ட ஒரு முக்கியத் தடையைப் பைடன் தலைமையிலான அரசு ரத்து செய்வதற்கான பணிகளை அதிரடியாகத் துவக்கியுள்ளது. இது மேலும் இந்தியா மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

ஐபிஎல் மினி ஏலம் – தேதியை அறிவித்த பிசிசிஐ!!

ஹெச் 1பி விசா வைத்திருக்கும் வெளிநாட்டவர்கள் கணவர் அல்லது மனைவி இருவரில் ஒருவர் மட்டுமே அமெரிக்காவில் பணிபுரிய முடியும் என்ற புதிய சட்டத்தை டிரம்ப் அரசு அறிவித்தது. இதனால் வெளிநாட்டு மக்கள் அனைவரும் கவலை அடைந்தனர். தற்போது இந்த திட்டத்தை ரத்து செய்யுமாறு ஜோ பைடன் அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here