ஜனவரி 7 முதல் மாநிலத்தில் அமலாகிறது ஊரடங்கு கட்டுப்பாடுகள் – விதிமுறைகளை வெளியிட்டு அரசு உத்தரவு!!

0

ராஜஸ்தான் மாநிலத்தில் ஓமைக்ரான் பரவல் வேகம் எடுத்துள்ளதால், வருகிற ஜனவரி 7ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கூடுதல் கட்டுப்பாடுகள் :

இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் கணிசமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும், கொரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் பரவலும் தீவிரம் காட்ட துவங்கியுள்ளது. இந்த நிலையில், பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. தற்போது, ராஜஸ்தான் மாநிலத்தில் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், ஜனவரி 7ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, அரசியல் சார்ந்த பொது நிகழ்வுகள் மற்றும் விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட கூட்டங்களில் 200 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல், திருமணத்தில் 100 நபர்கள், இறுதி சடங்கில் 20 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் இருந்து இங்கு வருபவர்களுக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் எனவும், 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட RT-PCR சோதனை அறிக்கை அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here