சர்வதேச பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2023: இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் அதிர்ச்சி தோல்வி!!

0
இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் அதிர்ச்சி தோல்வி
2023 சர்வதேச பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த 28ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வந்தது. இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சீனதைபேயின் சியாவ் ஹாவ் லீயை எதிர்த்து போட்டியிட்டார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே சியாவ் ஆதிக்கம் செலுத்தினார்.
அதன்படி முதல் செட்டை (21-23) கைப்பற்றினார். இதை தொடர்ந்து,  2வது செட்டுக்கு போட்டி நகர்ந்தது. இதில், சியாவ் 21-8 என்ற புள்ளி வித்தியாசத்தில் செட்டை கைப்பற்றியதுடன், 2-0 என்ற கணக்கில் கிடாம்பி ஸ்ரீகாந்த்தை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதர ஆட்டத்தில் இந்தியாவின் உன்னட்டி ஹூடாவை  எதிர்த்து சகநாட்டு வீராங்கனை ஆகர்ஷி காஷ்யப் விளையாடினார். இந்த ஆட்டத்தில் (15-21, 21-19, 21-10) என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்த ஆகர்ஷி இத்தொடரில் இருந்து வெளியேறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here