‘எஞ்சியிருக்கும் இந்தியர்கள் உக்ரனை விட்டு வெளியேறுங்கள்’ – இந்திய தூதரகம் அறிவுறுத்தல்!!

0
'எஞ்சியிருக்கும் இந்தியர்கள் உக்ரனை விட்டு வெளியேறுங்கள்' - இந்திய தூதரகம் அறிவுறுத்தல்!!
'எஞ்சியிருக்கும் இந்தியர்கள் உக்ரனை விட்டு வெளியேறுங்கள்' - இந்திய தூதரகம் அறிவுறுத்தல்!!

உக்ரைன் -ரஷ்யா போர் மீண்டும் வேகமெடுத்துள்ளதால், கீவ் நகரில் உள்ள இந்திய தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

இந்திய தூதரகம்:

கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி உக்ரைன்-ரஷ்யா போர் தொடங்கிய நிலையில் தற்போது வரை ஓய்ந்த பாடில்லை. இதன் விளைவாக, சர்வதேச அளவில் உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வு, பணவீக்கமும் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்கத்திலிருந்து மீண்டு வரவே பல்வேறு நாடுகள் திணறி வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் மீண்டும் போர் தீவிரமடைந்து வருவதால், உக்ரைனில் உள்ள இந்தியர்களை பாதுகாக்கும் விதம் தேவை இல்லாத பயணங்களை குடிமக்கள் மேற்கொள்ள வேண்டாம் என உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

பொதுமக்களுக்கு அடித்த ஜாக்பாட் – குடும்பங்களுக்கு ரூ.3500 சிறப்பு உதவித்தொகை! மாநில அரசு அதிரடி!!

அதாவது நாடு பெரும் அவல நிலையை சந்தித்து வருவதால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வரும் இந்தியர்கள் உக்ரைனை விட்டு உடனே வெளியேற வேண்டும். ஏற்கனவே இந்தியர்கள் பலர் வெளியேறியுள்ள நிலையில் உக்ரைனில் எஞ்சி இருக்கும் இந்தியர்கள் போலந்து, ருமேனியா, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா உள்ளிட்ட இந்திய தூதரகங்களை உதவிக்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here