இந்தியர்கள் இலங்கை செல்ல தடை – அயல்நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் உத்தரவு!!

0

கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் இந்தியாவில் மிகவும் வேகமாக பரவி வருகின்றது. நாள்தோறும் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக அயல்நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் இந்தியர்களை இலங்கை செல்ல தடை விதித்துள்ளது.

இந்தியர்களை தடைசெய்த அயல்நாடுகள்

உருமாறிய கொரோனாவால் இன்று மட்டும் சுமார் நான்கு லட்சம் பேர் இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே உள்ளது. இதன் எதிரொலியாக இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம், மே 14 வரை தடைவிதியுள்ளது . மற்றும் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா வந்தவர்கள் கட்டாயமாக 14 நாட்கள் தனிமை மையங்களில் இருக்க வேண்டும் என ஆஸ்திரேலியா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

‘முதல்ல எல்லாரும் வீட்டுக்கு போகட்டும் அப்புறம் நான் போறேன்’ – ‘தல’ தோனி செய்த நெகிழ்ச்சி சம்பவம்!!

அதை தொடர்ந்து இந்தியாவில் உள்ள ஆஸ்திரேலியர்கள், ஆஸ்திரேலியாவிற்கு வர தடை விதித்தது. மேலும் இந்த தடையை மீறுபவர்களுக்கு, ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் அல்லது பெரிய அளவில் அபராதம் விதிக்கப்படும் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும் என்று ஆஸ்திரேலியா அரசாங்கம் கூறியுள்ளது. மேலும் அமெரிக்க அரசாங்கமும் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையும், கொரோனா அச்சத்தின் காரணமாக இந்தியாவிலிருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு தடை விடியுள்ளது. இலங்கை மட்டும் இல்லாது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் இந்தியர்களுக்கு தங்கள் நாடுகளுக்கு அனுமதிக்க தடை விதித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here