சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கிய ஏடிகே மோகன் பகான்…, ஒரு கோல் வித்தியாசத்தால் தலைகீழாக மாறிய ஆட்டம்!!

0
சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கிய ஏடிகே மோகன் பகான்..., ஒரு கோல் வித்தியாசத்தால் தலைகீழாக மாறிய ஆட்டம்!!
சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கிய ஏடிகே மோகன் பகான்..., ஒரு கோல் வித்தியாசத்தால் தலைகீழாக மாறிய ஆட்டம்!!

இந்தியன் சூப்பர் லீக் தொடரில், ஏடிகே மோகன் பகான் அணி பெங்களூரு அணியை 4-3 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தி உள்ளது.

இந்தியன் சூப்பர் லீக்:

இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 9 வது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல், 11 அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில், நேற்று கொல்கத்தாவின் ஏடிகே மோகன் பகான் அணியானது பெங்களூரு அணிக்கு எதிராக மோதியது. இதில், ஏடிகே அணியானது 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஆனால், ஏடிகே மோகன் பகான் என பெயர் மாற்றப்பட்ட பிறகு தனது முதல் பட்டத்தை வெல்ல வேண்டும் என முனைப்பில் பெங்களூரு அணிக்கு எதிராக விளையாடியது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதில், ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை சரியாக பயன்படுத்திய டிமிட்ரி பெட்ராடோஸ் மற்றும் சுனில் சேத்ரி தலா ஒரு கோல்கள் அடித்தனர். இதனால், ஆட்டத்தின் முதல் பாதியில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தனர். இதையடுத்து தொடங்கப்பட்ட 2வது பாதியிலும், இரு அணிகளும் தலா ஒரு கோல்கள் அடிக்க, ஆட்ட நேர முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தனர்.

WPL 2023: 2வது வெற்றியை ருசித்த RCB…, முதல் தோல்வியை சந்தித்த மும்பை இந்தியன்ஸ்!!

இதனால், வெற்றியாளரை தீர்மானிக்க போட்டி பெனால்டி ஷூட்டை நோக்கி போட்டி நகர்ந்தது. இந்த பெனால்டி ஷூட்டில் ஏடிகே மோகன் பகான் அணியானது 4 கோல்கள் அடிக்க, பெங்களூரு அணி 3 கோல்கள் மட்டும் அடித்து சாம்பியன் பட்டத்தை வெல்ல தவறியது. இதனால், ஏடிகே மோகன் பகான் அணி 4-3 என்ற கோல் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி தனது முதல், பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here