WPL 2023: 2வது வெற்றியை ருசித்த RCB…, முதல் தோல்வியை சந்தித்த மும்பை இந்தியன்ஸ்!!

0
WPL 2023: 2வது வெற்றியை ருசித்த RCB..., முதல் தோல்வியை சந்தித்த மும்பை இந்தியன்ஸ்!!
WPL 2023: 2வது வெற்றியை ருசித்த RCB..., முதல் தோல்வியை சந்தித்த மும்பை இந்தியன்ஸ்!!

மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரில், RCB அணியானது தனது 2வது இடத்தை பதிவு செய்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது முதல் தோல்வியை சந்தித்துள்ளது.

WPL:

மகளிருக்கான பிரீமியர் லீக் (WPL ) தொடரில், நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டியில், இதுவரை நடந்த WPL லீக்கில் தோல்வியே சந்திக்காத மும்பை இந்தியன்ஸ் அணியானது, UP வாரியர்ஸ் அணியை எதிர்த்து மோதியது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 127 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த எளிய இலக்கை துரத்திய UP வாரியர்ஸ் அணி 19.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இதனை தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு போட்டியில், RCB அணியானது, குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது.

இந்த ஆண்டு IPL போட்டியில் RCB தான் வெல்லும்….,முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் கருத்து….,

இதில், லாரா வோல்வார்ட் (68) மற்றும் ஆஷ்லே கார்ட்னர் (41) என அடுத்தடுத்து வீராங்கனைகள் அதிரடியாக விளையாட, குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை குவித்திருந்தது. இதையடுத்து, இலக்கை துரத்த களமிறங்கிய RCB அணி 15.3 ஓவரிலேயே 189 ரன்கள் எடுத்து தனது 2 வது வெற்றியை பதிவு செய்தது. இதில், அதிகபட்சமாக சோஃபி டெவின் 99 மற்றும் மந்தனா 37 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here