இந்தியர்களின் சொத்து – விவரங்களை வெளியிட பச்சை கொடி காட்டிய சுவிஸ் வங்கி!!

0

சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் வங்கிக்கணக்கு விவரங்களை மூன்றாம் கட்டமாக வெளியிட சுவிஸ் வங்கி நிர்வாகம் சம்மதம் தெரிவித்துள்ளது.

சுவிஸ் வங்கி சம்மதம்:

இந்தியர்கள் தங்களின் கருப்பு பணத்தை வெளிநாட்டில் உள்ள சுவிஸ் வங்கியில் பதுக்கி வைத்திருப்பதாக அடிக்கடி பேசப்பட்டு வந்தது.  ஆனால், இந்தியர்கள் மேற்கொள்ளும் முதலீடுகளை தாங்கள் கருப்புப் பணமாக கருதவில்லை என தொடக்கத்தில் இருந்தே சுவிஸ் அரசு தெரிவித்து வந்தது.

 

இந்த நிலையில், இந்தியா மேற்கொள்ளும் வரி ஏய்ப்பு தடுப்பு நடவடிக்கைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருப்பதாக சுவிஸ் நிர்வாகம் உறுதி அளித்து இருந்தது. இது மட்டுமல்லாமல், 2018-ம் ஆண்டிலிருந்து இந்தியா – சுவிஸ் இடையே தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் போடப்பட்டு, சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் விவரங்களை  தாங்கள் அளிக்க தயாராக இருப்பதாக சொல்லி இருந்தது.

இதே போல், 2019-ம் ஆண்டு செப்டம்பரில் தகவல்களை அளித்தது கவனிக்க தகுந்தது. மேலும் ஆண்டுதோறும் விவரங்களை அளிப்பதாகவும் தெரிவித்து இருந்தது. சுவிஸ் வங்கியில் பணம் போட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 51-வது இடத்தில் உள்ள நிலையில், இந்தியர்களின் வங்கிக்கணக்கு விவரங்களை வழங்குவதில் முக்கிய அறிவிப்பை சுவிஸ் வங்கி வெளியிட்டுள்ளது.

அதாவது, இந்தியர்களின் வங்கி கணக்கு விவரங்களின்  மூன்றாம் கட்டத்தை வெளியிட தயாராக இருப்பதாகவும், இதோடு சேர்த்து இந்தியர்களின் சொத்துக்கள் அவற்றின் மூலம் கிடைக்கும் வருவாய் உள்ளிட்ட தகவலையும் சேர்த்து வெளியிட போவதாக அறிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here