காற்றில் கரைந்த நம்பர் ஒன் டென்னிஸ் வீரரின் பதக்க கனவு – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0

டென்னிஸ் போட்டியின் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோக்கொவிச் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் மெத்வதேவால் வீழ்த்தப்பட்டு பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

அதிர்ச்சி தோல்வி:

ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என்று 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் திருவிழா நியூயார்க் நகரில் சில நாட்களுக்கு முன் கோலாகலமாக தொடங்கியது.

 

இந்த போட்டியில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இதுவரை  ஏற்கனவே 3 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வாகை சூடிய நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோக்கொவிச் மீது பலத்த எதிர்பார்ப்பு எழுந்தது. ஏனெனில், இங்கு அவர் பட்டம் வென்றால்,  அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர் என்ற புதிய சாதனையை நிகழ்த்துவார் என்ற மிகுந்த ஆர்வம் ரசிகர்களிடையே எழுந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த போட்டியில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ளார்.

படுக்கையில் மிக மோசமான நிலையில் வெளிவந்த யாஷிகாவின் புகைப்படம் – கண்கலங்கிய ரசிகர்கள்!!

அதாவது, ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த இந்த போட்டியில் ரஷ்ய வீரர் மெத்வதேவ் வெற்றி பெற்றார். ஜோகோவிச்சின் இந்த அதிர்ச்சி தோல்வியால், புதிய வரலாறு படைக்கும் இவரின் கனவு வெறும் கனவாக மட்டுமே முடிந்தது.  அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் அவரின் தோல்வி ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  இதனால், இவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here