ஆஸ்திரேலியாவை அடிச்சுத் தூக்கிய இந்தியா – உலக கோப்பையில் முதல் வெற்றி..!

0

கிரிக்கெட் பெண்கள் உலக கோப்பையின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி நடப்பு சாம்பியன் ஆன ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதன் மூலம் இந்த வருட உலக கோப்பை போட்டியை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கி உள்ளது.

சுமாரான பேட்டிங்..!

சிட்னியில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஷஃபாலி வர்மா (29), மந்தனா (10) ரன்களில் வெளியேறினர். மறுபுறம் தீப்தி சர்மா (49), ரோட்ரிக்ஸ் (26) ரன்கள் அடிக்க இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அபாரமான பௌலிங்..!

133 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியில் அலிசா ஹீலி (51), கார்ட்னர் (34) தவிர மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். இதனால் 19.5 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 115 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கோஹ்லியின் கதையை முடிப்பேன் – யார் அந்த பந்துவீச்சாளர் ? Cricket Update Tamil

இந்திய அணி சார்பில் ஷிகா பாண்டே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை சாய்த்த பூனம் யாதவ் ஆட்ட நாயகி விருது பெற்றார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here