IND vs AUS 1st Test: முதல் இன்னிங்ஸில் 223 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா!!

0
IND vs AUS 1st Test: முதல் இன்னிங்ஸில் 223 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா!!
IND vs AUS 1st Test: முதல் இன்னிங்ஸில் 223 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா!!

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில், ஆஸ்திரேலிய அணியை விட 223 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

பார்டர் கவாஸ்கர் டிராபி:

பார்டர் கவாஸ்கர் டிராபியில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, முதல் நாளிலேயே 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில், கே எல் ராகுல் (20), அஸ்வின் (23), புஜாரா (7) என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏமாற்ற, அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா (120) சதம் அடித்து அசத்தினார். இதற்கிடையில், டெஸ்டின் அறிமுக வீரர்களான சூர்யகுமார் மற்றும் கே எஸ் பாரத் இருவரும் தலா 8 ரன்களில் வெளியேறி ஏமாற்றினர்.

ஆசிய தடகள இன்டோர் சாம்பியன்ஷிப்: புதிய சாதனை படைத்து வெள்ளி வென்ற தமிழக வீரர்!!

ஆனால், ஆல் ரவுண்டர் வீரர்களான, ஜடேஜா மற்றும் அக்சர் படேல் அதிரடியாக விளையாடி இருவரும் அரைசதம் கடந்தனர். நேற்று இந்திய அணியை ஆல் அவுட் செய்ய தடுமாறிய ஆஸ்திரேலிய அணி, இன்று வேகம் காட்ட தொடங்கியது. இதனால், ஜடேஜா (70), ஷமி (37), அக்சர் படேல் (84) ரன்களில் அடுத்தடுத்து வெளியேற இந்திய அணி 400 ரன்களுக்குள் சுருண்டது. இதன் விளைவால், இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 223 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here