விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்கும்., MY V3 ads மோசடி விவகாரம்.,  5000 பேர் மீது வழக்கு!!

0
விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்கும்., MY V3 ads மோசடி விவகாரம்.,  5000 பேர் மீது வழக்கு!!
சமீப காலமாக மக்கள் பல ஆன்லைன் செயல்களில் தங்களது பணத்தை முதலில் செய்து அதன் மூலம் வருமானம் பார்த்து வருகின்றனர். மேலும் இதில் பல மோசடி சம்பவங்கள் அரங்கேறி வந்தாலும் இது குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் மிகக் குறைவாகவே இருந்து வருகிறது.  இப்படியான சூழ்நிலையில் எம் ஒய் வி3 ஏ டி எஸ் என்ற நிறுவனம் இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள மக்களுக்கு யூடியூபில் விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்கும் என அறிவித்திருந்தது.
அதன்படி லட்சக்கணக்கானோர் இந்த செயலியில் தங்களது முதலீடு செய்து வந்துள்ளனர்.  மேலும் இதில் பலரும் நல்ல வருமானம் பார்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.  இதற்கிடையில் இந்நிறுவனம் பண மோசடி செய்ததாக கூறி கோவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாமாகவே வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர் இந்த நிறுவனத்தில் தாங்கள் முதலீடு செய்து நல்ல வருமானம் ஈட்டி வருவதால், MY V3 ads மீது பொய் வழக்கு பதிவு செய்ய நாங்கள் விடமாட்டோம் என தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநில மக்கள் நேற்று கோவையில்  ஒன்று கூடி இருந்தனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. இதையடுத்து MY V3 ads  நிறுவனத்திற்கு ஆதரவாக திரண்டு 5000 பேர் மீது பொது இடங்களில் தொல்லை கொடுத்தல் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here