ஐசிசி தரவரிசையில் பட்டியலில் வெளியீடு…, டாப் லிஸ்ட்டில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்…, முழு விவரம் உள்ளே!! 

0

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது (ஐசிசி) டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று வடிவ தொடரிலும் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஏற்ப தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், கடந்த வாரம் முழுவதும் டெஸ்ட் தொடர்களில் சர்வதேச அணிகள் அனைத்தும் விளையாடிய நிலையில், டெஸ்ட் தரவரிசையில் அதிக மாற்றம் நிகழ்ந்துள்ளது.

இதன்படி, டெஸ்ட் வடிவில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் விராட் கோலி 6வது இடத்திலும், ரோஹித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் 12 வது மற்றும் 13 வது இடத்தை பிடித்துள்ளனர். பவுலர்களுக்கான தரவரிசையில், இந்தியாவின் அஸ்வின் முதலிடத்திலும், பும்ரா மற்றும் ஜடேஜா 4வது மற்றும் 6 வது இடத்தையும், முகமது சிராஜ் மற்றும் ஷமி 19 மற்றும் 20 வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஜடேஜா மற்றும் அஸ்வின் முதல் இரண்டு இடங்களில் தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழக அரசு ஊழியர்களே., இனி பழைய ஓய்வூதிய திட்டம் கிடையாது? வெளியான முக்கிய தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here