மனித கழிவுகளை அகற்றும் பணியின் போது இறந்தவர்களில் தமிழ்நாடு முதலிடம் ..,  வெளியான முக்கிய அறிவிப்பு!!

0
தமிழ்நாடு முதலிடம் வெளியான முக்கிய அறிவிப்பு

தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் மனித கழிவுகளை அகற்றுவதற்கு கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும் மனிதர்கள் சுவாசிக்க முடியாமல் உயிரை இழக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. மக்களின் நலன் கருதி அரசு கழிவுநீர் தொட்டியில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்ய கூடாது என்று தெரிவித்திருந்தது. மேலும் அரசு உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தது.

அதுமட்டுமின்றி நிறுவனங்கள் அல்லது சொந்த வீடு வைத்திருப்பவர்கள் மனிதர்களை வைத்து கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தினால் அவர்களுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் , ரூபாய்  5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் தேசிய தூய்மை பணியாளர் மேம்பாட்டு ஆணைய தலைவர்  செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, கழிவுநீர் தொட்டியில் மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் தமிழ்நாடு தான் முதலிடம் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here