மனித கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம் – சென்னை உயர் நீதிமன்றம் காட்டம்!!

0

மனித கழிவுகளை மனிதனே அப்புறப்படுத்தும் கொடூர நிலை தொடராது என்ற உறுதியை மாநகராட்சி, நகராட்சி ஆணையம் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீதிபதி ஆணை:

பாதாள சாக்கடை, கால்வாய் உள்ளிட்ட இடங்களில் உள்ள அடைப்புகளை சுத்தம் செய்யும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபடுவார்கள்.  இவர்களில்  பலர் விஷவாயு தாக்கி இறக்க நேரிடுகிறது.  இவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என 2017ம் ஆண்டு துப்புரவு பணியாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் பொதுநல வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இது  குறித்த முக்கிய தீர்ப்பை நீதிபதி  சஞ்சீவ் பானர்ஜி அமர்வு தெரிவித்துள்ளது.

அதாவது, மனித கழிவுகளை மனிதனே அகற்றும் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.  தமிழகத்தில் உள்ள அனைத்து பேரூராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் இது போன்ற செயல் இனி நடக்காது என உறுதி அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.  இதுவரை இது சம்பந்தப்பட்ட இறப்புகள் குறித்த அறிக்கையை தமிழக அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தாலும், அதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியது.

இந்த வழக்கில், ஆஜரான அரசு வழக்கறிஞர்  முத்துக்குமார், நீதிமன்றம் அறிவித்துள்ளது போல, பாதாள சாக்கடை சார்ந்த தூய்மை பணியில் மனிதர்கள் பயன்படுத்தப்படுவதில்லை எனவும்,  இதற்காக உள்ள பிரத்யேகமான இயந்திரங்கள் மட்டும் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.  மேலும், நீதிபதி குறிப்பிட்டது போலவே நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் இது போன்ற கொடுமையான செயல்கள் நடக்காது எனவும் வாய்மொழி உறுதி அளித்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here