வறுத்து அரைத்த “நண்டு மசாலா” ரெசிபி – கிராமத்து விருந்து!!

0

கடல் வகையை சார்ந்த உணவுகளில் ஓன்று நண்டு. இதில் அதிக புரதசத்து உள்ளது. கற்பமுடைய பெண்கள் நண்டு சாப்பிட கூடாது. ஒமேகா 3, காப்பர், பாஸ்பரஸ் போன்ற கனிம சத்துக்கள் நண்டில் அதிகம் உள்ளது. தசைகளின் சீரமைப்பிக்கு உதவுகிறது. முகத்தில் பருக்கள் இருப்பவர்கள் நண்டு சாப்பிட்டால் பருக்கள் மறையும். குறைந்த அளவு கொழுப்பு மற்றும் வைட்டமின்கள் இருப்பதால் இதயத்திற்கு நல்லது. சளி, இருமல் இருப்பவர்கள் நண்டு ரசம் செய்து குடித்தால் சரியாகிவிடும்.

தேவையான பொருட்கள்:

 

  • நண்டு – 1/2 கிலோ
  • சின்ன வெங்காயம் – 1/4
  • தக்காளி – 4
  • பூண்டு – 10 பல்
  • மிளகு – 1 டீ ஸ்பூன்
  • சீரகம் – 1 டீ ஸ்பூன்
  • சோம்பு – -1 டீ ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – ஒரு டீ ஸ்பூன்
  • மிளகாய் தூள் – 2 டீ ஸ்பூன்
  • மல்லி தூள் – 2 டீ ஸ்பூன்
  • உப்பு,எண்ணெய் – தேவையான அளவு
  • கருவேப்பிலை, கொத்தமல்லி

செய்முறை:

முதலில் மிளகு, சீரகம், சோம்பு ஆகியவற்றை வறுத்து அரைத்துக்கொள்ள வேண்டும். வானிலையில் எண்ணெய் ஊற்றி சீரகம், கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து பொண்ணிறமாக வந்தவுடன் தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும். நன்றாக தக்காளி வதங்கியவுடன் அரைத்த மசாலாவை சேர்த்து சுத்தம் செய்து வைத்த நண்டையும் போட வேண்டும். மசாலா மற்றும் நண்டு ஒன்றாக சேர்ந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் மூடி வேக வைக்க வேண்டும்.

நண்டின் ஓடு கெட்டியாக இருந்தாலும் உள்ளே நன்றாக வெந்துவிடும். ஐந்து நிமிடம் கழித்து தண்ணீர் வற்றிய பின் கொத்தமல்லி இலைகளை சிறு சிறு துண்டுகளை நறுக்கி மேலே தூவ வேண்டும். இப்பொழுது சுவையான நண்டு மசாலா தயார். இதை சாதம் அல்லது சப்பாத்தி, தோசை போற்றவற்றிலும் சேர்த்து சாப்பிடலாம் மிக சுவையாக இருக்கும். நண்டு உடம்பிற்கு மிக மிக நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here