விதவைகளுக்கான மாதம் ரூ.1500 பென்ஷன் தொகை…, பெறுவது எப்படி?? முழு விவரம் உள்ளே!!

0
விதவைகளுக்கான மாதம் ரூ.1500 பென்ஷன் தொகை..., பெறுவது எப்படி?? முழு விவரம் உள்ளே!!
விதவைகளுக்கான மாதம் ரூ.1500 பென்ஷன் தொகை..., பெறுவது எப்படி?? முழு விவரம் உள்ளே!!

அரசானது பொது மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தும் அதனை சிறப்பாக செயல்படுத்தியும் வருகிறது. இதில், குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், பெண்கள், முதியவர்கள், விதவை பெண்கள் இவர்களுக்கு என தனியாக உதவித் தொகையுடன் சேர்ந்த சில சிறப்பு சலுகைகளையும் அரசு வழங்கி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த வகையில் தான், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் மற்றும் முதியவர்களுக்கு மாதந்தோறும் நிதியுதவியாக ரூ. 1000 முதல் ரூ. 1500 வரை ஓய்வூதிய தொகையை அரசு அளித்து வருகிறது. இதில், கணவனை இழந்த 18 முதல் 65 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு சமூக நலத்துறை ஆனது, மாதம் ரூ. 1400 முதல் ரூ. 1500 வரை நிதியுதவி வழங்கி வருகிறது.

தமிழக விவசாயிகள் கவனத்திற்கு.., நெல் விற்பனைக்கு விதிக்கப்பட்ட புது கட்டுப்பாடு.., வெளியான முக்கிய அறிவிப்பு !!!!

இந்த நிதியுதவியை பெற விரும்பும் விதவை பெண்கள், நேரடியாக சமூக நலத்துறை அலுவலகத்திற்கு சென்று விதவை ஓய்வூதியத் திட்டத்திற்கான வித்வா பென்ஷன் யோஜனா படிவத்தை பெற வேண்டும். அதில், கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களை பூர்த்தி செய்த பிறகு குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களையும் உடன் இணைத்து சமூக நலத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த படிவத்தின் உண்மை தன்மையை ஆராய்ந்த பிறகு, ஒவ்வொரு மாதமும் அவர்களுக்கான ஓய்வூதியம் கிடைக்க சமூக நலத்துறை வழி வகை செய்யும். மேலும், இந்த ஓய்வூதியமானது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here