ரூ. 2000 நோட்டுகளை மாற்ற மக்கள் என்னென்ன செய்ய வேண்டும்…, முழு தகவல் உள்ளே!!

0
ரூ. 2000 நோட்டுகளை மாற்ற மக்கள் என்னென்ன செய்ய வேண்டும்..., முழு தகவல் உள்ளே!!
ரூ. 2000 நோட்டுகளை மாற்ற மக்கள் என்னென்ன செய்ய வேண்டும்..., முழு தகவல் உள்ளே!!

இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற உள்ளதாக நேற்று (மே 19) அறிவித்து இருந்தது. மேலும், இனி 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதை உடனடியாக நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. இதன் தொடர்ச்சியாக, பொதுமக்கள் அனைவரும் வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் அனைத்து 2000 ரூபாய் நோட்டுகளையும் மாற்றி வங்கிகளில் கொடுத்து மாற்றி கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனால், கடந்த 2016ம் ஆம் ஆண்டு ரூ. 500, ரூ. 1000 நோட்டுகளை மாற்றி அமைத்தது போன்ற நிலை இந்தியாவில் உருவாகி உள்ளது. ரிசர்வ் வங்கி ரூ. 2000 நோட்டுகளை செப்டம்பர் 30ம் தேதிக்குள் மாற்ற வேண்டும் என கூறிய உள்ள நிலையில், இந்திய பொருளாதார வல்லுநர் ஒருவர் ஜூலை மாதமே ரூ 2000 செல்லாது என்ற அறிவிப்பு வர அதிக வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். இதனால், ரூ. 2000 நோட்டுகளை வைத்துள்ள மக்கள் அனைவரும் அதனை மாற்றியமைக்க தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த ரூ. 2000 நோட்டுகளை மாற்றுவதற்கான வழிமுறைகள் குறித்து பின்வருமாறு காணலாம்.

அங்காடி தெரு மகேஷ் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு.., அதனால தான் இந்த கதி!!

  • ரூ. 2000 நோட்டுகளை மாற்றுவதற்கான வசதி, வங்கிகளில் மே 23ம் தேதி முதல் தொடங்கும்.
  • ரிசர்வ் வங்கியின் கீழ் உள்ள 19 பிராந்திய அலுவலகங்களிலும் கிடைக்கும். மேலும், மற்ற வங்கிகளில் ரூ. 2000 நோட்டுகளை மாற்றுவதற்கு அவகாசகம் கொடுக்கப்பட்டுள்ளது.
  • வங்கி கணக்கு வைத்துள்ளோர், அந்தந்த வங்கிகளில் ஒரே நேரத்தில் ₹ 20,000 வரை மட்டுமே மக்கள் மாற்றிக்கொள்ள முடியும்.
  • வங்கி கணக்கு இல்லாதோர் அல்லது வேறு வங்கியில் ரூ. 2000 நோட்டுகளை மாற்ற விரும்புவோர் ஒரு நாளைக்கு ரூ. 4000 மட்டுமே மாற்றி கொள்ள முடியும்.
  • இத்தகைய பரிமாற்றங்களுக்கு எந்த கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை. மேலும், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த பணப்பரிமாற்றத்தில் ஏற்படும் சிரமத்தை குறைக்க சில ஏற்பாடுகளை செய்து கொடுக்கவும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரூ. 2000 நோட்டுகளை வங்கியில் மாற்றவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்??

  • ரூ. 2000 நோட்டுகளை மாற்றுவதற்கான அனைத்து ஆவணங்களையும் சரியாக வைத்திருந்தும் வங்கி ஊழியர்கள் வாங்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட வங்கிகளில் முதலில் புகார் அளிக்க வேண்டும்.
  • இந்த புகாருக்கு பிறகு ஒரு மாதத்திற்குள் சரியான பதில் கிடைக்கவில்லை என்றால், ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த குறைதீர்ப்புத் திட்டம், 2021இன் கீழ் புகார் மேலாண்மை அமைப்பு போர்ட்டலில் (cms.rbi.org.in) புகாரைப் பதிவு செய்யலாம். இதன் மூலம், தகுந்த தீர்வை பெற முடியும் என தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here