உங்க டிரைவிங் லைசென்ஸில் பிழை இருக்கா? வீட்டில் இருந்தபடியே மாற்றிக்கொள்ளணுமா? இதை மட்டும் செஞ்சா போதும்!!

0
உங்க டிரைவிங் லைசென்ஸில் பிழை இருக்கா? வீட்டில் இருந்தபடியே மாற்றிக்கொள்ளணுமா? இதை மட்டும் செஞ்சா போதும்!!
உங்க டிரைவிங் லைசென்ஸில் பிழை இருக்கா? வீட்டில் இருந்தபடியே மாற்றிக்கொள்ளணுமா? இதை மட்டும் செஞ்சா போதும்!!

பொதுவாக 18 வயதை பூர்த்தி செய்த அனைவரும் ஓட்டுநர் உரிமம் பெற்றுக்கொள்ள அனுமதி உள்ளது. மேலும் இந்த சேவையை ஆன்லைனில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளது. அப்படி பதிவு செய்து வாங்கும் டிரைவிங் லைசென்ஸ்களில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டி இருந்தாலும் அதை மாற்றிக் கொள்ளும் வசதி உள்ளது. மேலும் அதற்கான வழிமுறைகள் மற்றும் எவ்வாறு விவரத்தை ஆன்லைனில் மாற்றுவது என்பதை தற்போது பார்ப்போம்.

Enewz Tamil WhatsApp Channel 

வழிமுறைகள்

  • உதாரணத்திற்கு, உங்கள் மொபைல் எண்களை மாற்றவேண்டி இருந்தால் முதலில் https://parivahan.gov.in/ என்ற தளத்தை ஓபன் செய்து கொள்ளவும்.
  • பின்னர் அதன் முதல் பக்கத்தில் உங்களுக்கான மாநிலத்தை தேர்வு செய்யவும். பின் அதில் others என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • அப்போது அதில் நீங்கள் எந்த லைசென்ஸ் டைப் என கேட்கும், அதையும் தேர்வு செய்து கொள்ளவும்.
  • பின்னர் “License Issue Date, Driving License Number, Date of Birth” உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து sumit செய்யவும். இது பின் மற்ற சில விவரங்கள் ஸ்கிரீனில் தெரியும். அதையும் சரிபார்த்து proceed என்ற ஆப்ஷனை கொடுக்கவும்.
  • இதையடுத்து நீங்கள் எதற்காக மொபைல் எண்ணை மாற்ற வேண்டும் என்பதற்கான காரணத்தை தேர்வு செய்து proceed செய்யவும். இதன் பிறகு உங்களுடைய புதிய போன் நம்பருக்கு OTP வரும். பின்னர் அதை VERIFY செய்வதன் மூலம் உங்க புதிய மொபைல் எண் அப்டேட் ஆகிவிடும்.

மகளிர் உரிமை தொகை…, இன்னும் 2 நாள் தான்…, பெறாதவர்களுக்கு சூப்பர் அப்டேட்…, வெளியான முக்கிய தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here